அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

Sunday, June 6, 2010

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தயாராகுவோம்
அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பும், தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பும் இவ்வாண்டு ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறும்.இதற்காக கணக்கெடுப்பாளர்கள் உங்கள் வீடு தேடி வந்து உங்களிடமிருந்து விவரங்களை சேகரிப்பார்கள்.
வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் முக்கிய விவரங்கள்:
குடும்பத் தலைவர் பெயர்,
குடும்பத்திலுள்ள ஆண்கள்,
பெண்கள் மற்றும் மொத்த நபர்களின் எண்ணிக்கை,
வீட்டின் கட்டுமானப்பொருள்,
குடிநீர் வசதி,
சமையல் வசதி, கழிப்பிட வசதி,
குடும்பத்தின் வசமுள்ள பொருள்கள் (சைக்கிள், மோட்டார் சைக்கிள் மொபெட், கார், ஜீப், வேன், டிரான்சிஸ்டர், ரேடியோ, தொலைபேசி, கைபேசி, கணினி போன்றவை)
தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு சேகரிக்கப்படும் விவரங்கள்:
குடும்பத் தலைவரின் பெயர்,
குடும்ப அங்கத்தினர்களின் பெயர்,
ஒவ்வொரு நபரின் பிறந்த தேதி,
திருமண நிலை,
தொழில்,
தந்தை,
தாயார்,
துணைவர் பெயர்,
பிறந்த ஊர்,
தற்போதைய முகவரி,
நிரந்தர முகவரி.
குடும்ப அங்கத்தினர்கள் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருக்கவும்.கணக்கெடுப்பாளர்கள் வரும்போது தேடாமல் இந்த விவரத்தை உடனே கொடுக்க வசதியாக இருக்கும்.

No comments:

Post a Comment