அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

Friday, July 16, 2010

நான்குநேரி அருகே வக்கீல் தற்கொலை

திருநெல்வேலி : நான்குநேரி அருகே வக்கீல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: நான்குநேரி அருகேயுள்ள நம்பிநகரை சேர்ந்த முத்தையா மகன் கண்ணன்(28). வக்கீல். இவர் நேற்று வீட்டில் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடினார். தந்தை முத்தையா, கண்ணனை ஏர்வாடி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆஸ்பத்திரி செல்லும் வழியில் கண்ணன் இறந்தார்.
இதுகுறித்து முத்தையா நான்குநேரி போலீசில் புகார் அளித்தார். புகாரில், ஏர்வாடிக்கு சென்ற தன் மகன் கண்ணனை அங்கு சிலர் தாக்கியதாகவும், மோட்டார் பைக்கை சேதப்படுத்தியதாகவும், இதனால் மனமுடைந்து கண்ணன் தற்கொலை செய்துகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இச்சம்பவம் நேற்று நான்குநேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment