அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

Sunday, June 6, 2010

மேலும் ஒரு கப்பலை கைப்பற்றியது இஸ்ரேல்




அஷ்தாத்:இஸ்ரேல் ஏற்படுத்திய தடையின் காரணமாக பட்டினியால் வாடும் காஸ்ஸா மக்களுக்கு அளிப்பதற்காக நிவாரணப் பொருட்களுடன் வந்துக்கொண்டிருந்த மேலும் ஒரு கப்பலை இஸ்ரேலிய ராணுவம் கைப்பற்றியது.

இஸ்ரேலின் அராஜகத்தால் 2003 ஆம் ஆண்டு காஸ்ஸாவில் வீடுகள் இடிப்பதை தடுக்க முயன்று புல்டோசர் ஏற்றிக்கொல்லப்பட்ட அமெரிக்காவைச் சார்ந்த மனித உரிமைப் போராளி ரெய்சல் கோரியின் பெயரைக் கொண்ட இக்கப்பல் துருக்கியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃப்ரீ காஸ்ஸா மூவ்மெண்ட் என்ற ஜீவகாருண்ய சேவகர்களின் தலைமையில் காஸ்ஸாவை நோக்கி வந்துக்கொண்டிருந்தது.

சிறிய கப்பலான ரெய்சல் கோரியை காஸ்ஸா கடற்பகுதிக்கு 30 கிலோமீட்டர் தொலைவில் வைத்து இஸ்ரேலிய ராணுவம் கைப்பற்றி இஸ்ரேல் துறைமுகமான அஷ்தோதிற்கு கொண்டு சென்றது.

பலம் பிரயோகிக்காமலேயே கப்பலை கைப்பற்றியதாகவும், கப்பலில் இருந்தவர்களிடமிருந்து எதிர்ப்பு ஒன்றும் ஏற்படவில்லை எனவும் இஸ்ரேலிய ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

காஸ்ஸாவிற்கு சென்றுக் கொண்டிருந்த ரெய்சல் கோரி கப்பலுக்கு இஸ்ரேலிய எச்சரிக்கை விடுத்தபோதிலும் அவர்கள் அதனை புறக்கணித்து காஸ்ஸாவிற்கு சென்றதால் படகுகளில் சென்ற ராணுவத்தினர் கப்பலை கைப்பற்றியதாக ராணுவச் செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கிறார்.

அயர்லாந்துக் கப்பலான ரெய்சல் கோரி நிவாரணக்குழுவில் நோபல் பரிசுப்பெற்ற மெய்ரீட் மகேயர், முன்னாள் ஐ.நா துணைச்செயலாளர் ஜெனரல் டென்னிஸ் ஹாலிடே ஆகியோர் அடங்கியிருந்தனர்.

சிகிட்சை உபகரணங்கள், வீல் சேர்கள், சிமெண்ட் உள்ளிட்ட 1200 டன் சரக்குகள் கப்பலிருந்தன.இஸ்ரேலின் இன்னொரு அக்கிரமமான நடவடிக்கைதான் ரெய்சல் கோரியை கைப்பற்றியது என ஃப்ரீ காஸ்ஸா மூவ்மெண்டின் செய்தித்தொடர்பாளர் க்ரேட்டோ பெர்லின் தெரிவித்தார்.

கடந்த வாரம் காஸ்ஸாவிற்குச் சென்ற கப்பல்களின் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் அதிலிருந்த நிவாரணப்பணியாளர்கள் வெள்ளைக்கொடியை காட்டிய பொழுதும் காட்டுமிராண்டித்தனமாக சுட்டதில் 9 பேர் காயமடைந்தனர். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.

இஸ்ரேலின் இந்த அராஜக நடவடிக்கை உலக முழுவதிலும் இஸ்ரேலுக்கு எதிராக கடும் எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியது.செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments:

Post a Comment