
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடலோர மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சுழன்றடிக்கும் சூறைக் காற்றால் கடலில் கொந்தளிப்பு ஏற்படுவதும் தொடர்கிறது. கடந்த சில நாட்களாக சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி கடல் பகுதியில் ஏற்பட்ட அலைகளின் சீற்றத்தால் தேங்காய் பட்டினத்தில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.
No comments:
Post a Comment