அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

Saturday, June 12, 2010

நெல்லை மாவட்டத்தில் போலீசார் அதிரடி

திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் முறையான கல்வித்தகுதியின்றி "அலோபதி' சிகிச்சை அளித்ததாக 8 பெண்கள் உட்பட 28 "போலி' டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., படிக்காமல் பலர் அலோபதி சிகிச்சை மேற்கொண்டு வருவதாக இந்திய மருத்துவ சங்கத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட வாரியாக அலோபதி சிகிச்சை அளிக்கும் மாற்று முறை மருத்துவர்கள், இதர நபர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலி டாக்டர்கள் இருப்பது தெரியவந்தது. போலி டாக்டர்களை கைது செய்யும்படி போலீஸ் டி.ஜி.பி., லத்திகாசரண், ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணனிடம் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதன் எதிரொலியாக நேற்று தமிழகம் முழுவதும் முறையான கல்வித்தகுதி இன்றி அலோபதி மருத்துவத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று காலை முதல் மதியம் வரை போலி டாக்டர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் : அம்பாசமுத்திரத்தை சேர்ந்த நாராயணன், பாபநாசம், ஐயப்பன், கல்லிடைக்குறிச்சியில் மாணிக்கவாசகம், வி.கே.புரத்தில் அண்ணாமலை நாகப்பன், ஆழ்வார்குறிச்சியில் ஷாஜகான், சரோஜா, முக்கூடலில் அரிராம்சேட், களக்காட்டில் சுப்பையா, முத்துசாமி, கங்காதரன், திருக்குறுங்குடியில் செல்லப்பா, துரை, வள்ளியூரில் அபுபக்கர், திசையன்விளையில் பென்னிராஜ், செல்வராஜ், பெல்லார்மின், கூடன்குளத்தில் தனம், சாரம்மாள், பிரான்சிஸ் யேசுநேசன், பணகுடியில் அம்புரோஸ், ராணி, வாசுதேவநல்லூரில் கோமதி, மணிமொழி, மரிய அந்தோணியம்மாள், கிரிஜா, சேர்ந்தமரத்தில் தங்கசாமி, பழவூரில் மலக்கல் பாரூக் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 28 பேரில் 8 பேர் பெண்கள். இவர்கள் முறையான கல்வித்தகுதியின்றி அலோபதி முறையில் ஊசி போட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து அலோபதி மருந்துகளை போலீசார் கைப்பற்றினர்.
எஸ்.பி., ஆஸ்ராகர்க் கூறும்போது, ""மாவட்டத்தில் முறையான படிப்பு இன்றி அலோபதி சிகிச்சை அளித்து வருபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். "போலி' டாக்டர்களை குறி வைத்து போலீசார் மேற்கொண்ட "அதிரடி' நடவடிக்கை நேற்று மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்மாவட்டங்களில் 76 போலி டாக்டர்கள் கைது : தென்மண்டல ஐ.ஜி., தகவல் : தென் மாவட்டங்களில் 76 "போலி' டாக்டர்கள் கைது செய்யப்பட்டதாக தென் மண்டல ஐ.ஜி.,(பொறுப்பு) அபய்குமார் சிங் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் முறையான கல்வித்தகுதி இன்றி அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வருபவர்களை கைது செய்ய நேற்று போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். சித்தா, ஹோமியோபதி சான்றிதழ்கள் வைத்துக்கொண்டு அலோபதி முறை மருத்துவம் செய்து வந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தென் மண்டல ஐ.ஜி., (பொறுப்பு) அபய்குமார் சிங் கூறும்போது, ""மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, குமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை கொண்ட தென் மண்டல பகுதியில் 76 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. என்றார்

No comments:

Post a Comment