அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

Monday, July 12, 2010

சொத்துவரி செலுத்தவில்லையா? கட்டு, 2% வட்டி அபராதம்!


முறையாக சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு, அபராதமாக வரி தொகையில் 2% வட்டியினை விதிக்க சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு எடுத்துள்ளது. முறையாக வரி செலுத்துவோருக்கு வரி தொகையில் 1 சதவீதம் ஊக்க தொகை அளிக்கவும் சென்னை மாநகராட்சி முன் வந்துள்ளது.

சென்னையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இருக்கின்றன. இருப்பினும் சுமார் 55 சதவீதம் பேரே முறையாக சொத்துவரி கட்டி வருகின்றனர். இதனால், மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.800 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தாலும் முறையாக கட்டாதவர்களால், மாநகராட்சிக்கு வரவேண்டிய வருமானத்தில் சுமார் 500 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதுவரை முறையாக சொத்துவரி கட்டாதவர்களிடமிருந்து வரி வசூலிக்க, சென்னையில் அனைத்து கட்டிடங்களையும் முறைபடுத்தும் பணி விரைந்து நடந்து வருகிறது. அத்துடன் வரி வசூலை அதிகப்படுத்தவும், நிலுவையில் உள்ள பாக்கி தொகைகளை வசூலிக்கவும் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

முறையாக வரி செலுத்துவோருக்கு வரி தொகையில் 1 சதவீதம் ஊக்க தொகையாக வழங்கவும் 6 மாதங்களுக்குள் வரி செலுத்தாதவர்களுக்கு மாதந்தோறும் 2 சதவீத வட்டியை அபராதமாக விதிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்கான தீர்மானம் வருகிற 29-ந்தேதி மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வரப்படுகிறது

No comments:

Post a Comment