அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

Monday, July 12, 2010

குற்றால அருவிகளில் மிதமான தண்ணீர்


குற்றாலம் : குற்றால அருவிகளில் நேற்று மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. குற்றாலம் பொதிகை மலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த சாரல் மழை காரணமாக அருவியில் தண்ணீர் அதிகமாக விழுந்தது. பின்னர் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்தது. நேற்று மெயின் அருவியில் மிதமான அளவில் விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் கார் பார்க்கிங் வரை நீண்ட வரிசையில் நின்று குளித்து சென்றனர். ஐந்தருவியில் 4 கிளைகளிலும் பரவலாக தண்ணீர் விழுந்தது. புலியருவி, சிற்றருவி, பழையகுற்றால அருவிகளில் மிதமாக தண்ணீர் விழுந்தது. குற்றாலத்தில் நேற்று காலை முதல் வெயில் அடித்தது. மாலையில் இதமான தென்றல் காற்று வீசியது. வெயிலையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது

No comments:

Post a Comment