அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

Thursday, July 22, 2010

சென்னை சிறுவன் ஆதித்யா கொலை: பெண் கொலையாளி சிக்கினார்

சென்னை: விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஆதித்யா என்ற சிறுவனை கொலைசெய்து பிணத்தை சூட்கேஸுக்குள் வைத்து நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் போட்டுவிட்டு சென்றது தமிழகமெங்கும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தனது காதலன் ஏமாற்றியதால் அவனின் மகனை பழிக்கு பழி வாங்கிய காதலியின் செயல்தான் சிறுவன் ஆதித்யா கொலைக்கு காரணம் என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஒரு சூட்கேஸ் கேட்பாரற்று கிடந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு அதை சுற்றி ஈக்கள் மொய்க்க ஆரம்பித்ததும் உடனே அங்கிருந்தவர்கள் வெளிப்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பிளேடால் சூட்கேஸை கிழித்து பார்க்கையில், நான்கு வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. சிறுவனின் கழுத்து நெறித்து கொல்லப்பட்டு, முகம் பாலீத்தின் பைகளால் இருக்கக் கட்டி மூடப்பட்டிருந்தது. இதையடுத்து காவல்துறையினர் நேற்று இது தொடர்பாக அனைத்து பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுத்தனர். பத்திரிக்கைகளில் வந்த இந்த விளம்பரத்தைப் பார்த்த சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஜெயக்குமார் என்பவரின் மனைவி ஆனந்தி நாகப்பட்டினம் விரைந்தார். கொலையானசிறுவனின் சடலத்தைப் பார்த்து அதிச்சி அடைந்த அவர் அந்த சடலம் தனது மகன் ஆதித்யாதான் என்பதை உறுதி செய்தார்.

இதற்கிடையே சென்னையில் சிறுவன் ஆதித்யா காணாமல் போன சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் செய்யப்பட்டிருந்ததால் காவல்துறையினர் ஆதித்யாவின் தந்தை ஜெயக்குமாரிடம் விசாரித்து வந்தனர். தொடர் விசாரணையில் ஆதித்யா கொலையில் ஜெயக்குமாருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் பூவரசி என்பவர் கைது செய்யப்பட்டார் பூவரசியிடம் நடத்திய விசாரணையில் சிறுவன் ஆதித்யாவை கொன்றது தான் தான் என்பதை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து பூவரசியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

No comments:

Post a Comment