சென்னை: சென்னையை சேர்ந்த ஆதித்யா என்ற நான்கு வயது சிறுவனை கொலைசெய்த வழ்க்கில் கைது செய்யப்பட்டுள்ள பூவரசியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பூவரசி சிறுவன் ஆதித்யாவை கொன்றது தான் தான் என்பதை ஒப்புக்கொண்டார் இதனை தொடர்ந்து நடந்த விசாரணயில் பூவரசி பல திடுகிடும் தகவல்களை கூறியுள்ளார்.
எனது பெயர் பூவரசி நான் வேலூர் மாவட்டம் ஆரணியை சேர்ந்தவள். எம்.எஸ்.சி. முடித்துள்ளேன். வேலை தேடி சென்னைக்கு வந்தேன். டாடா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. அந்த நிறுவனத்தில் எனக்கும் உயர் அதிகாரியாக கேரளாவை சேர்ந்த ஜெயக்குமார் இருந்தார். அங்கே எனக்கும் ஜெயக்குமாருக்கும் காதல் ஏற்பட்டது. அவர் என்னையே திருமணம் செய்து கொள்வததாக கூறினார். பல ஊர்களுக்கு சென்று நாங்கள் ஒன்றாக தங்கியுள்ளோம்.
இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன். உடனே என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினேன். ஆனால் அவர் எப்படியோ பேசி என்னை சம்மதிக்க வைத்து என் கர்ப்பத்தை கலைக்க வைத்து விட்டார்.
இந்நிலையில் ஆனந்தி என்ற பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். சிலநாட்களில் அவர் அந்த டாடா நிறுவனத்தில் இருந்து நின்றுவிட்டார். இது எனக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது இந்த நிலையில் எனக்கும் டாடா நிறுவனத்தில் இருந்த வேலை போய்விட்டது. நான் ஆரணிக்கு சென்றுவிட்டேன். சமீபத்தில் மீண்டும் எங்களுக்குள் தொடர்பு ஏற்பட்டது. அடிக்கடி செல்போனில்
பேசிக்கொள்வோம் அவர் வேலை பார்க்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார். அதனால் அவரை நம்பி நான் சென்னை வந்தேன். மீண்டும் அவர் என்னுடன் நெருங்கிப் பழகினார்.என்னை அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார். அதை நான் முழுமையாக நம்பினேன்.
இரண்டாவது முறையும் என்னை ஏமாற்றியதால் எனக்கு அந்த ஏமாற்றத்தை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. பல தடவை கெஞ்சிக்கேட்டும் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்தார். எனக்கு குழந்தைகள் இருக்கிறார்களே உன்னை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கூறி திருமணத்திற்கு மறுத்தார். ஜெயக்குமார் தன் மகன் ஆதித்யா மீது அதிக பாசம் வைத்திருந்தார். ஆதித்யா உயிருடன் இருக்கும் வரை அவர் நம்மை திரும்பிப் பார்க்கமாட்டார் என்று நினைத்தேன். அதனால் ஆதித்யாவை கொலை செய்து விட முடிவு செய்தேன். இதனால் ஆதித்யாவை பார்க்கும்போதெல்லாம் என் மனதுக்குள் கொலைவெறி ஏற்பட்டது.
இதனால் ஆதித்யாவை கொன்றுவிட திட்டமிட்டேன். இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி அன்று பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் ஜெயக்குமாருடன் ஆதித்யா தி.நகரில் உள்ள அலுவலகத்துக்கு வந்திருந்தான். இது பற்றி அறிந்ததும் நான் தி.நகர் சென்று ஜெயக்குமாரிடம், நான் தங்கியுள்ள விடுதியில் ஆண்டு விழா நடக்கிறது. சிறுவர்களுக்கு நிறைய பொம்மைகள் கொடுப்பார்கள் எல்லாரும் தங்கள் உறவினர் குழந்தைகளை அழைத்து வந்துள்ளனர். நான் ஆதித்யாவை அழைத்து செல்கிறேன். சாயங்காலம் கொண்டு வந்துவிட்டு விடுகிறேன் என்றேன்.
ஜெயக்குமாரும் என்னை நம்பி ஆதித்யாவை என்னுடன் அனுப்பி வைத்தார். நான் தங்கி இருந்த விடுதிக்கு அவனை அழைத்து வந்தேன். கயிற்றால் அவன் கழுத்தை இறுக்கி கொன்றேன். சுவரில் அவன் தலையை மோதினேன். பிறகு அவன் முகத்தை பாலிதீன் வைத்து இறுக்க கட்டினேன் ஆதித்யா பிணத்தை சூட்கேசுக்குள் திணித்து அடைத்தேன்.
பாரிமுனை சென்று தெருவில் மயங்கி விழுந்து விட்டதாவும், ஆதித்யாவை காணவில்லை என்றும் நாடகம் ஆடினேன். ஜெயக்குமார் வந்ததும் நானும் அவரும் எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தோம். 17-ம் தேதி இரவு
11.30 மணி வரை போலீசார் என்னை விசாரித்தனர். மறுநாள் காலை வரும்படி என்னை அனுப்பி விட்டனர். விடுதிக்கு நள்ளிரவு திரும்பிய நான் ஆதித்யா உடல் இருந்த சூட்கேசை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தேன். அங்கிருந்து புதுச்சேரிக்கு பஸ்சில் எடுத்துச் சென்றேன்.
புதுச்சேரி பஸ் நிலையத்தில் நிறைய போலீசார் நின்று இருந்தனர். எனவே பயந்துபோய் புதுச்சேரியில் இருந்து வேறொரு பஸ்சில் நாகை சென்றேன். 8 மணி நேரமாக பிணத்துடன் பஸ்சில் பயணம் செய்து நாகை சென்றேன்.
அங்கு கழிப்பிடம் அருகில் சூட்கேசை வைத்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டேன். 17-ந்தேதி நள்ளிரவு புறப்பட்ட நான் 18-ந்தேதி அதிகாலை நாகையில் ஆதித்யா உடலை வைத்துவிட்டு உடனே அடுத்த பஸ் பிடித்து சென்னை வந்து விட்டேன். அந்த சமயத்தில் என் செல்போனை சுவிட்ஆப் செய்து வைத்திருந்தேன் 18-ம் தேதி காலை போலீசார் என் செல்போனை தொடர்பு கொண்டார்களாம். என் போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்ததால் என் மீது அவர்களுக்கு சந்தேகம் அதிகமாகிவிட்டது.
நேற்று காலை மெரீனா கடற்கரைக்கு சென்று அமர்ந்து தன்னந்தனியாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது போலீசார் என்னை போனில் தொடர்பு கொண்டு நான் கடற்கரையில் இருப்பதை அறிந்து வந்து கைது செய்து அழைத்துச் சென்றனர்’’ என்று பரப்பரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். பூவரசி நாளை நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்படுவார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment