அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

Saturday, July 31, 2010

ஏர்வாடி தமுமுகவினர் மீது பொய் வழக்கு: பொதுமக்கள் கடும் கண்டனம்


நெல்லை ஏர்வாடி மெயின் ரோட்டில் 6வது தெருவில் உள்ளது மெர்ஸி நர்ஸிங்
ஹோம். இங்கு தங்கும் ஒரு நர்சுடன் வெளியூரைச் சேர்ந்த (நான்குநேரி) வக்கீல் கண்ணன் என்பவருக்கு முறையற்ற உறவு இருந்துள்ளது. தினமும் இரவு அந்த வெளியூர் நபர் வருவதும் கள்ளத் தொடர்பை தொடர்வதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.
குடும்பத்துப் பெண்கள் தங்கள் பணியின் நிமித்தம் தங்கி இருக்கும் இடத்தில் ஒரு முறையற்ற உறவு தொடர்வது மற்ற நர்சுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியதால் இவர்களில் சிலர் அக்கம்பக்கத்து வீட்டினர்களிடம்ஷ இதனை குமுறலுடன் கூறியுள்ளனர்.
அநீதியை தட்டிக் கேட்பதில் என்றும் சளைக்காத துடிப்புமிக்க இயக்கமாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக சகோதரர்களிடம் இந்த அநியாயம் குறித்த பொதுமக்கள் முறையிட்டனர்.
12.07.2010 அன்று வழக்கம் போல்
கள்ளத் தொடர்புக்கு வலுசேர்க்கும் விதமாக சர்ச்சைக்குரிய பேர்வழி கண்ணன் வந்தபோது இதனைஎதிர்பார்த்து காத்து இருந்த
பொதுமக்கள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். நம்ம பகுதியை கேவலப்படுத்தி விட்டானே என்ற ஆத்திரம் பொது மக்களிடையே வெடித்தது. கோபத்தோடு கூடியிருக்கும் மக்கள் தனிநபரான கண்ணனை
சரமாரியாக தாக்கினால் அவர் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என எண்ணிய தமுமுக தலைவர் பக்ருதீன் கண்ணனை மருத்துவமனையில் ஒரு அறையில் வைத்துப் பூட்டினார். அத்தோடு ஆத்திரம் அடைந்த மக்களையும் அமைதிப்படுத்தினார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த சில நர்சுகள் கண்ணனை தப்பிக்க வைத்து விடுகின்றனர்.
பிடிபட்ட பேர்வழி தப்பியதை அறிந்து பொதுமக்களின் ஆத்திரம் மேலும் அதிகரித்தது. கோபத்துடன் பொதுமக்கள் நாலாபுறமும் தேடத் தொடங்கினர். தப்பி ஓடி நான்குநேரி சென்ற
கண்ணன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஏர்வாடி பொதுமக்களும், தமுமுகவினரும் தாக்கியதால்தான் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாக தமுமுக நிர்வாகிகள் மீது நான்குநேரி காவல்துறை பொய் வழக்கு (இபிகோ பிரிவு 308) போட்டது.
13.07.2010 அன்று பக்ருதீன், அம்ஜத், முகைதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தகவல்
அறிந்த தமுமுக நிர்வாகிகள் தமுமுக அலுவலகத்தில் திரண்டனர்.அலுவலகத்தில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். தமுமுகவினரின் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறையைக் கண்டித்து கண்டன போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. காவல் துறையினர் நியாயமற்ற முறையில் உள்நோக்கத்தோடு நடந்து கொண்டனர். மமக நகர செயலாளர் மாகின் ஊனமுற்ற சகோதரர் ஆவார். இவருக்கும் சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை எனக் குற்றம் சாட்டப்பட்ட நர்ஸ்
கூறியும் கூட காவல்துறை உதவி ஆய்வாளர் அந்தோனி அம்மா உனக்கும் தொடர்பு எனக் கூறி அவரை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றிருக்கிறார்.இதைப்போல வஷீமீளியூர் காவல்நிலையத்தில் தமுமுகவினரை
கைது செய்து எஃப்.ஐ.ஆர் போட்டதோடு அவர்களை பார்க்க வந்த மாவட்ட நிர்வாகிகளை வள்ளியூர் காவல்நிலைய ஆய்வாளர் சுந்தரேசன் பார்க்கவே அனுமதிக்கவில்லை.
கடந்த ஆண்டு ஏர்வாடி அருகில் உள்ள சூரங்குடியில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த
சமையல் மாஸ்டர் அசன்ரபிக் சில சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டார். ஆனால் கொலையை தற்கொலை என மூடி
மறைத்த காவல்துறை தற்போது தமுமுகவினர் மீது பொய் வழக்கு போட்டுள்ளதை காவல்துறையைக் கண்டித்து மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக மாநில செயலாளர் பி.எஸ். ஹமீது தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.
மாநில துணைச் செயலாளர் எஸ்.காதர் மைதீன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் மைதீன் பாரூக், செயலாளர் உஸ்மான் கான், பொருளாளர் புளியங்குடி செய்யது அலி,
மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மைதீன் சேட்கான்,பொருளாளர் ரசூல் மைதீன்
துணை செயலாளர் நயினார் முகம்மது, சுல்தான், துணை தலைவர் சர்தார் அலிகான்
மற்றும் மில்லத் இஸ்மாயில் ஆகியோர் உரையாற்றினர்

No comments:

Post a Comment