அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

Tuesday, July 27, 2010

அமித் ஷா மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு


சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரனையில் இருந்து வரும் குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பங்கு வர்த்தக தரகர் கேதன் பரேக் மீதான ஊழலில், அமித் ஷா, லஞ்சம் வாங்கி கொண்டு அவரை காப்பாற்றியதாக புகழ்பெற்ற தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

2005-ம் ஆண்டில் நடந்த பங்கு வர்த்தக ஊழலில் சுமார் 1,200 கோடி ரூபாய் அளவுக்கு கேதன் பரேக் மோசடி செய்ததாகவும், அப்போது பெருந்தொகை லஞ்சமாக பெற்றுக் கொண்டு அமித் ஷா, கேதன் பரேக்கை காப்பாற்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து அப்போதைய் துணை போலிஸ் இயக்குனர், குஜராத் மாநில தலைமை செயலருக்கு, சிபிஐ விசாரனை கோரி கடிதம் எழுதியதாகவும், மோடி அரசு, நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் தி ஹிந்து நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment