அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

Sunday, July 18, 2010

இந்திய ரூபாய்க்கு புதிய குறியீட்டை வடிவமைத்த தமிழக மாணவர்!


புது டெல்லி: இந்திய ரூபாய் நோட்டுக்கான புதிய அடையாள குறியீட்டை வடிவமைத்த த.உதயகுமார் தமிழர் ஆவார். இவருடைய ஆக்கமான இக்குறியீட்டை அம்பிகா சோனி தலைமையிலான அமைச்சரவையால் நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சென்னை தண்டையார் பேட்டை கார்ப்பரேசன் காலனி 4வது தெருவைச் சேர்ந்தவர். ஐ.ஐ.டி முதுநிலை பட்டதாரி மாணவரான த.உதயகுமார், இவரது தந்தை தர்மலிங்கம் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏவும், மு.க.அழகிரி பேரவையின் தலைவரும் ஆவார். தாயார் பெயர் ஜெயலட்சுமி ஆகும். இவர்களது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மரூர் என்பதாகும்.

உதயகுமார், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள லாசேட்லியர் உறைவிட ஜூனியர் கல்லூரியில் +2வரை படித்தார். பின்னர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து பி.ஆர்ட் பட்டம் பெற்றார். உதயகுமார், பி.ஆர்ட் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்வு பெற்றார். ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உள்ள விஜயகுமார், ஓவியத்திற்காக பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.

மேலும் மும்பை ஐ.ஐ.டியில் தொழில் டிசைனிங் பிரிவில் (விஷுவல் கம்யூனிகேசன்) முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர், சில நிறுவனங்களுக்கு டிசைன் வடிவமைத்து கொடுக்கும் பணிகளையும் செய்து வந்தார். இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த ஆண்டு அறிவித்த ரூபாய்க்கான அடையாள குறியீட்டு போட்டிக்கு தான் வடிவமைத்த அடையாள குறியீட்டை அனுப்பிவைத்தார் உதயகுமார்.

இந்த போட்டிக்கு வந்த 3000,அடையாள குறியீட்டில், உதயகுமாரின் அடையாள சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் மூலம் 2.5 லட்சம் பரிசு கிடைக்க உள்ளது. மேலும், தான் படித்த மும்பை கவுகாத்தி ஐ.ஐ.டியில் தொழில் டிசைனிங் பிரிவில் உதவிப் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment