அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

Monday, January 3, 2011

வேதாரண்யம் அருகே நடுக்கடலில் விநோத ஓசை!


நேற்றிரவு வேதாரண்யம் கடல்கரை பகுதியில் நடுக்கடலில் எழுந்த விநோத ஓசையால் மக்கள் பீதியடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஓசை கேட்ட பகுதிக்கு கடற்படை கப்பல்கள் விரைந்தன.

வேதாரன்யம் அருகே புஷ்பவனம் கடல்பகுதியிலிருந்து பயங்கர ஓசை கேட்டது. இதனால் அப்பகுதி மக்கள் குழப்பமும் பீதியும் அடைந்தனர். கிராம மக்கள் கடற்கரைக்குச் சென்று பார்த்தபோது எதுவும் தெரியவில்லை. இது குறித்து தகவலறிந்த கடலோர பாதுகாப்பு போலீஸார் ரோந்துக் கப்பல்களுடன் அங்கு வந்தனர். அதேசமயம், கடலோரக் காவல் படையின் கடற்படையின் சிறிய ரோந்துக் கப்பலும் ஓசை வந்த திசை நோக்கி சென்றதாகத் தெரிகிறது.

இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் மோகன் கூறுகையில், இந்த ஓசை குறித்து எதுவும் தெரியவில்லை. வெடிகுண்டு வெடித்ததால் வந்த ஓசையா அல்லது வேறு காரணமா என்பதும் தெரியவில்லை. அப்பகுதிக்கு ஒரு ஆய்வுக்குழு சென்றுள்ளது. அவர்க்ள் திரும்பி வந்த பிறகுதான் உண்மையான காரணம் தெரிய வரும் என்றார்.

No comments:

Post a Comment