அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

Monday, January 3, 2011

ஜிமெயில் - உங்களுக்கு வரும் இமெயிலை அரசும் படிக்கும்


ஜிமெயில் - உங்களுக்கு வரும் இமெயிலை அரசும் படிக்கும்: பாதுகாப்பு காரணங்கள் கருதி இனி இந்தியர்களின் ஜிமெயில் மின்னிதழை மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் படிக்க வாய்ப்பு உண்டு. இதற்கான வசதியை இந்திய ஜிமெயில் நிர்வாகத்திடம் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத அச்சுறுத்தலின் காரணமாக சந்தேகப்படும் நபர்களின் மின்னிதழை அணுகும் வசதியை மத்திய அரசு ப்ளாக் பெர்ரி, நோகியா உள்ளிட்ட சர்வதேச தொலை தொடர்பு நிறுவனங்களோடு பெற்றுள்ளது. தற்போது பிரபலமாக இருக்கும் ஜிமெயில் நிர்வாகத்திடமும் இந்த வசதியை கோரியுள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறான வசதியை அரசாங்கம் பெறும் பட்சத்தில், இந்திய கணிணிகளோடு செயல்படும் அனைத்து ஜிமெயில் மின்னிதழ்களும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு வர வாய்ப்புண்டு. இது குறித்து பேசிய உள் துறை செயலர் ஜி கே பிள்ளை, சந்தேகப்படும் நபர்களின் மின்னிதழ்களை மட்டும் தான் அரசு அனுகும், எனினும் தனி நபரின் தனிமை விஷயத்தில் அரசு கவனமாக இருக்கும் என்றார்.

2008 ஆண்டிடின் தொழில்நுட்ப சட்ட திருத்த மசோதா, இவ்வாறான மின்னிதழ்களை படிக்கும் உரிமையை அரசுக்கு வழங்குகிறது என்பது குறீப்பிடத்தகக்கது

No comments:

Post a Comment