அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

Tuesday, January 11, 2011

எல் கே ஜிக்கு நுழைவுத்தேர்வு நடத்த அரசு தடை


எல் கே ஜிக்கு நுழைவுத்தேர்வு நடத்த அரசு தடை

எல்.கே.ஜி எனப்படும் பாலர் கீழ்நிலைக்கல்விக்கும் தமிழகத்தில் சில பள்ளிகள் நுழைவுத்தேர்வையும் நன்கொடையையும் மேற்கொள்வதாக தெரியவருகிறது.


இந்நிலையில் இது குறித்து கல்வித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கல்வித்துறை அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில்,

ஜுலை 1-ந்தேதி 3 வயது நிரம்பிய குழந்தைகள் எல்.கே.ஜி.யில் சேர தகுதி உடையவர்கள். அவர்களை எல்.கே.ஜி.யில் சேர்க்க எந்த வித நுழைவுத்தேர்வும் நடத்தக்கூடாது. அவர்களின் பெற்றோர் படித்திருக்கிறார்களா என்று கேட்கக்கூடாது. விண்ணப்ப கட்டணம் ரூ.50க்கு மேல் இருக்கக்கூடாது. மாணவர்சேர்க்கைக்காக நன்கொடை வசூலிக்கக்கூடாது. பள்ளிக்கூடங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு புகையிலைபொருட்கள் விற்கக்கூடாது. புகை பிடிக்கவும் கூடாது. பள்ளிகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.


பாலக மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களை ஆசிரியர்கள் வேலை ஏவவோ, . அடிக்கவோ கூடாது. நான் இங்கு கூறியவற்றை ஏற்கனவே பல முறை பள்ளிகளுக்கு கல்வி அதிகாரிகள் மூலம் தெரிவித்துள்ளோம்.

என்று தெரிவித்துள்ளார்.


6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவச கல்வி அளிக்கப்படவேண்டியது அரசின் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதும், சர்வ சிக்சா அபியான் என்ற அந்தத் திட்டத்துக்கு நிதியுதவி அளிப்பதும் குறிக்கத்தக்கது

No comments:

Post a Comment