அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

Tuesday, January 11, 2011

கூட்டம் கூட்டமாக செத்து மடிந்த பறவைகள்!


கூட்டம் கூட்டமாக செத்து மடிந்த பறவைகள்! மனித குலத்துக்கு ஆபத்து! விஞ்ஞானிகள் தகவல்


சமீபகாலமாக பறவைகள், மீன்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கூட்டம் கூட்டமாக செத்து மடியும் நிகழ்வுகள் அமெரிக்காவில் அதிகரித்து வருகின்றன. இது மனித குலத்துக்கும் ஓர் எச்சரிக்கையாகும் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் அர்கன்சாஸ் பகுதியில் சுமார் 3000 பறவைகள் வானில் இருந்து கூட்டம் கூட்டமாக செத்து விழுந்தன. மேலும் செசாபிக் கடற்பகுதியில் சுமார் 20 லட்சம் மீன்கள் மடிந்து கரை ஒதுங்கின. இதேபோல் வியட்நாமில் சுமார் 150 டன் எடை உள்ள சிகப்பு திலாபியா என்ற கடல்வாழ் உயிரினமும், இங்கிலாந்தில் சுமார் 40 ஆயிரம் நண்டுகளும் இறந்துள்ளன.

இவை உயிரிழந்தமைக்கான காரணங்கள் குறித்து விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். கலிபோர்னியா மாநிலத்தில் விலங்கியல் வல்லுனர்கள், சர்வதேச விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஜான்வியன்ஸ் என்ற நிபுணர் தலைமையில் நடத்திய கூட்டு ஆய்வில் இது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. விலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் கூட்டம் கூட்டமாக இறப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




சுற்றுச்சூழல் மாசுபாடு, நோய்த்தாக்குதல் என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் சரியான காரணம் கேள்விக் குறியாகவே உள்ளது. அசுத்தமான காற்று உள்ளிட்ட இதர இயற்கைக் காரணிகளின் மாசுபாடு, கடல் நீர், சுற்றுச்சூழலில் அதிகரிக்கும் அமிலத்தன்மை ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. கடந்த 8 மாதங்களில் அமெரிக்காவில் 95 அரிய வன விலங்குகள் மற்றும் 900 பருந்துகள், மின்னசோட்டாவில் 4300 வாத்துகள், பல்லி வகையை சேர்ந்த 1500 சாலமண்டர்கள் எதிர்பாராமல் தொற்று நோய் உள்ளிட்ட பாதிப்புகளால் இறந்துவிட்டன.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பங்களால் காற்றில் மின்காந்த கதிர்வீச்சுகள் தற்போது முன்பைவிட பல மடங்கு அதிகரித்துள்ளன. அதுகூட காரணமாக இருக்கலாம். இதுதொடர்பாக விரிவான ஆய்வு நடத்தி வருகிறோம். இயற்கையை, சுற்றுச்சூழலை பாதுகாத்தால் மட்டுமே இதுபோன்ற தொடர் மரணங்களை தடுக்க முடியும். இவ்விஷயத்தில் அலட்சியம் காட்டினால் வருங்காலத்தில் மனித குலத்துக்கும் பேராபத்துகள் நிகழவும் வாய்ப்பிருப்பதாக அமெரிக்க விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment