அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.
Wednesday, April 6, 2011
பேருந்தின் மேல் தளத்தில் கடத்தப்பட்ட ரூ.ஐந்துகோடி பறிமுதல் - அமைச்சர் நேருவுக்குத் தொடர்பா?
இலஞ்சம் 'கொடுக்கும்'பொதுமக்கள் இலஞ்சம் 'வாங்கும்' நிகழ்வாகிய தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஊர்கள் தோறும் பணக் கடத்தல் நடைபெற்று வருகிறது. இந்தப் பணக் கடத்தலுக்கு எதிராக தேர்தல் ஆணையம் அதிரடியாக சோதனைகள் நடத்தி 'மல்லுக்கட்டி' வருகிறது.
அதிகாரப்பூர்வமற்ற ஒரு செய்தியின் படி, வாகனச் சோதனையில் பிடிபடும் பணம் மட்டுமே நாளொன்றுக்கு சராசரியாக சுமார் ஒரு கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சியில் ஆம்னி பேருந்தின் மேல்தளத்தில் கத்தை கத்தையாக வைக்கப்பட்டிருந்த 5 கோடியே 5 இலட்சத்து, 27 ஆயிரம் ரூபாய்கள் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் நேருவின் 'உறவினருக்கு உரியதாம்.
திருச்சி பொன்நகரில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் நேருவின் உறவினர் உதயகுமார் என்பவருக்குச் சொந்தமான சொகுசுப் பேருந்தில் மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கீதா தலைமையில் காவலர் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த பேருந்தை அதிரடி சோதனை செய்ததில் 5 பைகள் சிக்கின. இவை பேருந்தில் மேல்தளத்தில் கிடந்தவையாம்.
இந்த பைகளை பிரித்து பார்த்த போது கட்டுக்கட்டாக ரூ. 1000 , 500 கரன்சி நோட்டுகள் சிக்கியது. கைப்பற்றப்பட்ட பணத்தின் மதி்ப்பு ரூ. 5 கோடியே, 5 லட்சத்து 27 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க கடத்தி வரப்பட்டதா? என்பது குறித்தும் மொத்த தொகை எவ்வளவு என்பன குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் உதயகுமாரின் அலுவலகம், வீடு ஆகிய இடங்களில் வருமானவரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment