அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

Thursday, April 7, 2011

என் "இமேஜை', "டேமேஜ்' செய்கின்றனர்: விஜயகாந்த்!


அ.தி.மு.க.பொதுச் செயலர் ஜெயலலிதா, கேபிள் "டிவி' அரசுடமையாக்கப்படும் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் என்னை குறிவைத்து தாக்கி என் இமேஜை டேமேஜ் செய்கின்றனர்” என, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார்.தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் நடந்த கூட்டத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது கருணாநிதி, "லோக்சபா, சட்டசபை தேர்தலில் தேர்ந்தெடுத்தீர்கள். அதுபோல, உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுத்தால் உங்கள் தேவை அனைத்தையும் எங்களால் செய்துதர முடியும்' என்றார்.அப்படி கூறியவரால், ஏன் காவிரியில் நீரை பெற்றுத்தர முடியவில்லை. முல்லைப் பெரியாறு அணை உயரத்தை உயர்த்த நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியவில்லை. கடந்த 2006ல் நடந்த தேர்தலில் நான் தனியாக நின்றதால் என்னை விமர்சித்து யாரும் பேசவில்லை. தேர்தல் அறிவிப்புக்கு முன், நான் பேரத்துக்கு கட்டுப்படாததால் தற்போது @வறு வழியில் இறங்கி விட்டனர் .

அ.தி.மு.க.பொதுச் செயலர் ஜெயலலிதா, கேபிள் "டிவி' அரசுடமையாக்கப்படும் என்றதும், அதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் என்னைக் குறிவைத்து என் இமேஜை டேமேஜ் செய்கின்றனர். நீங்கள் செய்யும் ஊழல்களுக்கு எல்லாம் கட்டாயம் சிறை செல்லப்போவது உறுதி. அது உங்கள் கூட்டணி கட்சியினரால் (காங்கிரஸ்) நடக்கும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

No comments:

Post a Comment