அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

Wednesday, March 28, 2012

பெட்ரோல் விலை குறைந்தது

வாட் எனப்படும் மதிப்புக் கூட்டுவரியை குறைத்ததால், கோவாவைத் தொடர்ந்து டெல்லியிலும் பெட்ரோல் விலை குறைந்தது கோவா மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.11 விலை குறைக்கப்பட்டது அறிந்ததே. அண்மையில் சட்டமன்ற தேர்தலில் வென்ற பாஜக முதல்வர் மனோஹர் பரிக்கர் கடந்த திங்களன்று மாநில சட்டப்பேரவையில் இத்தகவலை அறிவித்திருந்தார். தேர்தல் வாக்குறுதிபடி, பெட்ரோலுக்கான மதிப்புக் கூட்டுவரியை மிகமிகக் குறைந்த அளவாக 0.1 சதமாக ஆக்கியதால்இவ்விலைகுறைப்பு சாத்தியமானது.
இதே வழிமுறையைப் பின்பற்றி, பெட்ரோலுக்கான வாட் எனப்படும் மதிப்புக் கூட்டுவரியை டெல்லி அரசாங்கமும் குறைத்துள்ளது. இதனால் டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.15 அளவில் குறைந்துள்ளது. இனி டெல்லியில் பெட்ரோல் விலை ரூ. 65.64 என்பதிலிருந்து ரூ. 50.64 என்று இறங்கியிருக்கு

No comments:

Post a Comment