
விழுப்புரம் அருகே ரயில்வே தண்டவாளம் தகர்ப்பு குறித்த விசாரணை க்யூ பிரிவு காவல்துறையிடம் மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
விழுப்புரம் அருகே ரயில்வே தண்டவாளம் வெள்ளிக் கிழமை நள்ளிரவில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குல் நடத்தப்பட்டிருக்கக் கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன.
வெடிகுண்டு சம்பவம் நடைபெற்ற இடம் அருகே "மேதகு பிரபாகரனின் தம்பிகள்" என்று குறிப்பிடப்பட்டிருந்த துண்டுப் பிரசுரம் கிடைத்ததாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. அந்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வாசகம் வருமாறு:
இந்திய அரசே ரத்த வெறி பிடித்த ஓநாய் ராஜபக்சேயின் இந்திய வருகையை கண்டிக்கிறோம். தமிழினம் அழிப்பதற்கு துணைபோன இந்திய அரசையும், தமிழக அரசையும் கண்டிக்கிறோம். தமிழா இனியும் மவுனம் சாதித்தால் புரியாது நமது மவுன வலி . இவண். மேதகு பிரபாகரன் தம்பிகள்
No comments:
Post a Comment