அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

Sunday, June 13, 2010

கன்னியா குமரி மாவட்டத்தில் தொடரும் காதல் திருமணங்கள்


குளச்சல், ஜூன்.12&
தேர்வு எழுதச் சென்றபோது மாயமான மாணவியை காதலனுடன் போலீசார் மீட்டனர்.
தேர்வு எழுத சென்றார்
குளச்சலை அடுத்த தும்பக்காடு பகுதியை சேர்ந்தவர் சாகுல்அமீது. இவருடைய மகள் கதீஜா (வயது 23). நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் கம்ப்யூட்டர் தேர்வு எழுதுவதற்காக கடந்த 2&ந் தேதி புறப்பட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடுதிரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்த பின்னர் அவரது சகோதரர் அஷ்ரப் அலி குளச்சல் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் மாணவி கதீஜா உடுமலைப்பேட்டை பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் மீட்டனர்
உடனே போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது, குளச்சல் கள்ளிஅடப்பு பகுதியை சேர்ந்த கிஷோர்குமார் (25) என்ற வாலிபரை காதலித்ததாகவும், அவரை உடுமலைப்பேட்டை பதிவாளர் அலுவலத்தில் வைத்து பதிவுத்திருமணம் செய்து கொண்டதாகவும் கதீஜா தெரிவித்தார். குளச்சல் பகுதியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் மையத்தில் கதீஜா வேலை பார்த்தபோது, கிஷோர்குமாருடன் பழக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது. கிஷோர்குமார் தற்போது கோவையில் உள்ள தனியார் மில்லில் வேலைபார்த்து வருகிறார்.
இதையடுத்து கதீஜாவையும், கிஷோர்குமாரையும் போலீசார் மீட்டு குளச்சலுக்கு அழைத்து வந்து இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் கதீஜா தனது காதலன் கிஷோர்குமாரை திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடன்தான் வாழ்வேன் என்று உறுதியாக கூறினார். இதனைத் தொடர்ந்து கதீஜாவை அவரது காதலனுடனேயே அனுப்பிவைத்தனர்

No comments:

Post a Comment