அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

Sunday, June 13, 2010

சென்னையில் நில அதிர்வு

சென்னையின் பல பாகங்களிலும் நள்ளிரவில் ஏற்பட்ட நில அதிர்வைத் தொடர்ந்து மக்கள் பீதியுடன் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நள்ளிரவு 1.10 மணி அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்து, தங்கள் குழந்தைகளுடன் சாலைகளுக்கு ஓடி வந்தனர். வீடுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சரிந்து விழுந்தன. மேஜை, நாற்காலிகள் அதிர்ந்தன.

தேனாம்பேட்டை, எழும்பூர், வேப்பேரி, மைலாப்பூர், தியாகராய நகர், திருவான்மியூர், கோபாலபுரம், மதுரவாயல், தங்கசாலை, ராயப்பேட்டை, சாந்தோம், பல்லாவரம், கொடுங்கையூர், கே.கே. நகர் மற்றும் கொராட்டூர் ஆகிய இடங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது.

நிகோபர் தீவில் இருந்து 164 கிலோ மீட்டர் தூரத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. இதன் எதிரொளியாகவே சென்னையில் நில அதிர்வு உணரப்பட்டதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி ஒருவர் கூறினார்.

நிக்கோபரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மியான்மர், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் இது விலக்கிக் கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment