அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.
Saturday, July 10, 2010
தவ்ஹீத் ஜமாத் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர்கள பிரதமர் மன்மோகன் சிங்கை டில்லியில் இன்று காலையில் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் கூறுகின்றன. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியையும் அவர்கள் சந்தித்தனர். இது தொடர்பாக தவ்ஹீது ஜமாத் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கோரி ஜூலை 4ஆம் தேதி அன்று சென்னை தீவுத்திடலில் கோரிக்கை பேரணி மற்றும் மாநாட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தியது. மாநாட்டின் இறுதியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம். ஹாரூனும் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத் தலைவர்கள் பிரதமரைச் சந்திக்க ஹாரூன் மூலம் மேற்கொண்ட முயற்சியை அடுத்து செவ்வாய்க் கிழமை காலை 11 மணி அளவில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தனர். தவ்ஹீத் ஜமாத் தலைவர்கள் ஜைனுல் ஆபிதீன், சம்சுல் லுஹா, அப்துல் ஹமீது, கோவை ரஹ்மத்துல்லா மற்றும் தேசிய லீக் தலைவர் பஷீர் அஹமது ஆகியோருடன் ஜே.எம். ஹாரூனும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கோரி மனு அளித்தனர்.
பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை அவரது அலுவலகத்தில் சந்தித்து அவரிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment