அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

Monday, July 12, 2010

ஏர்வாடி காசிம் மீதான வழக்கை 2 மாதத்துக்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு


வெடிபொருள் வைத்திருந்ததாக ஏர்வாடி காசிம் மீது தொடரப்பட்ட வழக்கை இன்னும் 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு, ரெயில் குண்டு வெடிப்பு, வெடிபொருட்களை பதுக்கி வைத்த குற்றச்சாட்டு ஆகியவை தொடர்பாக ஏர்வாடி காசீம் என்ற முகமது காசீமை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 1998ஆம் ஆண்டு கைது செய்தனர். இந்த வழக்குகளை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. ஒரு வழக்கில் ஆயுள் தண்டனையும் மற்றொரு வழக்கில் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஏர்வாடி காசீமுக்கு விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்புகளை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஏர்வாடி காசீம் மனு தாக்கல் செய்தார். அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட தண்டனைகளை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் ஏர்வாடி காசீம் மீதான, வெடிபொருள் வைத்திருந்ததான வழக்கு மட்டும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் பிணை கேட்டு உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். ஆனால் அவர் கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகள் சிறையில் இருக்கிறார். இது அரசியல் சாசனத்துக்கு முரணானது. இந்த வழக்கையும் 5 ஆண்டுகளுக்குள் முடிக்காதது துரதிருஷ்டவசமானது.

எனவே அவருக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை அளிக்கப்படுகிறது. ரூ.1 லட்சத்துக்கான சொந்த பிணையும், அதே தொகைக்கான இருநபர் பிணையும் அளித்து அவர் சிறையில் இருந்து வெளியே வரலாம்.

ஏர்வாடி காசீம் மீதான நிலுவையில் இருக்கும் வழக்கை இன்னும் 2 மாதங்களுக்குள் பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு விசாரித்து முடிக்க வேண்டும்

No comments:

Post a Comment